Saturday, January 16, 2016

15 வகை முட்டை சமையல்!

இப்போது, பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை... ‘‘தினமும் முட்டை கொடுங்க!’’ என்பதுதான். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் ஏற்ற சரிவிகித உணவு முட்டை என்பதுதான் அதன் ஸ்பெஷல்! அதோடு, சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது என்பதுடன், அதை சமைப்பதும் எளிதுதான். 


ஆனால், ‘நீங்க என்னதான் சொல்லுங்க... முட்டையை வேக வைச்சுக் கொடுக்கிறது, ஆம்லெட், ஆஃப் பாயில் மாதிரி சில அயிட்டங்கள் தவிர வேற என்னதான் செஞ்சு கொடுக்கிறது முட்டையில?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்காகவே, உங்களுக்கு ‘மினி பிரியாணி மேளா’ மூலம் நன்கு அறிமுகமான கலைச்செல்வி சொக்கலிங்கம், பிரமாதமான 15 ரெசிபிகளை வழங்கி இருக்கிறார். 

எல்லாமே மிக எளிமையான செய்முறைகள்தான். எனவே முட்டைகளை வாங்கி, விதம் விதமாக, ருசி ருசியாக

Saturday, November 7, 2015

தீபாவளி

தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தையாவது எரித்துவிட வேண்டும்.

 இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனின் இரு மனைவியருள் ஒருவரான நிலமகளுக்குப் பிறந்த மகன் ஓர் அசுரன். அப்போது கிருஷ்ணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான்.

 பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று

Monday, August 18, 2014

SSA-2015 -பள்ளி பராமரிப்பு மானியம்-செலவிட வழிகாட்டு நெறிமுறைகள்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு: விண்ணப்பங்கள் வரவேவற்பு

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அரசு தேர்வுகள்மண்டலத் துணை இயக்குனரின் செயலர் ஆசிர்வாதம் செய்திக்குறிப்பு:ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு தேர்தவில் 50 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து தற்போது வரும் கல்வியாண்டில் படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் 5 ரூபாய் சேவைக் கட்டணம் 5 மொத்தமாக 10 விதம் ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் உரிய முதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 22ம் தேதி ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 @பருக்கு 50 ஆண்கள், 50 பெண்கள் 9ம் வகுப்பு 12ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்பு உதவித்தொகை ஆண்டுதோறும் 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயில்வோரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினம் - போட்டிக்கான கட்டுரைகளை ஆகஸ்ட் 30க்குள் அனுப்ப வேண்டும்

வரும் செப். 5 ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் கல்வி இருக்க வேண்டும். அதற்காக வரும் செப். 5ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்கும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் "என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர்" என்ற தலைப்பிலும், ஆசிரியர்கள் "வகுப்பறையில் வசந்தம்" என்ற தலைப்பிலும், ஆர்வலர்கள் "அரசு பள்ளிகள் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் "இப்படித்தான் இருக்க வேண்டும் வகுப்பறை" என்ற தலைப்பிலும் கட்டுரைகளை வரும் ஆக. 30 க்குள் அனுப்ப வேண்டும்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: முத்துக்கண்ணன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூடலூர். மேலும் விபரங்களுக்கு 9488011128, 9944094428 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, August 14, 2014


இந்திய தேசியக்கொடி அறிவோம்


ன்று செவ்வாய்க் கிழமை. ஜூலை மாதம் 22ம் தேதி 1947ம் வருடம். இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டம். அன்றைய தினத்தின் முதல் நடவடிக்கையாக, நம் நாட்டின் தேசியக்கொடியினைத் தீர்மானித்து முடிவு செய்வது எனும் நோக்கத்தில் கூடியிருந்தது.
ஆனாலும் அன்றைக்கு முதலில் பேசிய பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராம் நாராயண் சிங், ஒரு வேண்டுகோளை முன்வைத்து சபையின் கவனத்தை ஈர்த்தார்.
“விடுதலை அடையவிருக்கும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை நிர்ணயம் செய்ய கூடியுள்ள இந்த மாபெரும் அவையின், கடிதங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறைகளில் இன்னமும் ‘மாட்சிமை தங்கிய மன்னரி சேவையில்’ எனும் தலைப்பு காணப்படுகிறது. இந்த பொருத்தமற்ற

Saturday, July 19, 2014

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில்

Saturday, July 5, 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்

* தகுதிகாண் பருவத்தில்
உள்ளவர்கள் EL எடுத்தால்
probation period
தள்ளிப்போகும்.


* பணியில் சேர்ந்து ஒரு வருடம்
முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம். ஆண், பெண்
இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)
மகப்பேறு விடுப்பு எடுத்தால்
அந்த வருடத்திற்கான

தவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்!

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.
தவாங் புகைப்படங்கள் - தவாங் வார் மெமோரியல் - முகப்புத் தோற்றம் 
Image source: tawang.nic.in
இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில் இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. ‘த’ என்பது குதிரையையும் ‘வாங்’ என்பது ‘தேர்ந்தெடுத்த’ என்பதையும்

Wednesday, May 14, 2014

கண் தானம் செய்வது எதற்கு? எப்படி?... யாரெல்லாம் செய்யலாம்... மேலும் சில ...

மண்ணுக்குள் புதைக்கும் கண்களை
மனிதருக்குள் விதைப்போம்...



கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம்

Tuesday, May 13, 2014

Tamil Nadu Engineering Admissions- 2014: Online Application / Advertisement:

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?


பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்தஎ ல்லைக்குட்பட்ட சிவில் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ்,

Saturday, May 3, 2014

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்கான சில டிப்ஸ்...

சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் அலர்ஜிதான். இதை சாப்பிடக்கூடாது அதை சாப்பிடக் கூடாது என்று பல விதி முறைகள். நன்றாக சமைத்தாலும் உண்ண முடியாத நிலை இருக்கும். இனிப்பை மிகவும் விரும்பி உண்பவர்களுக்கோ சொல்லவே வேண்டாம். இனிப்பின் கிட்டவே நெருங்க கூடாது என்ற நிலை.

இப்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் சோர்வாகவும், உடல் வலியையும் உணர்வார்கள். இதில் காயம் ஏற்பட்டால் உடனே சரி ஆகாமல் படாத பாடு படுவார்கள். சர்க்கரை நோயால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதி கால் தான். நம் உடலின் முழு பலத்தையும் தாங்குவது

Monday, April 14, 2014

கௌரவர்கள் 100 பேரின் பெயர் பட்டியல்

எனக்கு ஒரு போன்,
"ஹலோ"
"யார் பேசுறீங்க"
"சார், கௌரவர்களின் நூறுபேரின் பெயரும் தெரியுமா?'
"நீங்க யாரு?'
"..........................." 
தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
அந்த நூறு பேர்களின் பெயர்களை புத்தகங்களில் தேடித் தேடி..........................யுரேகா,யுரேகா................. கண்டுபிடிச்சுட்டேன்.

அதான் இந்த போஸ்ட்.
கௌரவர்கள் 100 பேரின் பெயர் பட்டியல்
இவர்களுள் மூத்தவர் 1.துரியோதனன் இரண்டாமவர் 2.துச்சாதனன்.இவர்கள் இருவரும் நன்கு அறிந்தவர்கள்.
3
துசாகன்
4
ஜலகந்தன்
5
சமன்
6
சகன்
7
விந்தன்
8
அனுவிந்தன்
9
துர்தர்சனன்
10
சுபாகு
11
துஷ்பிரதர்ஷனன்
12
துர்மர்ஷனன்
13
துர்முகன்
14
துஷ்கரன்
15
விவிகர்ணன்
16
விகர்ணன்
17
சலன்
18
சத்வன்
19
சுலோசனன்
20
சித்ரன்
21
உபசித்ரன்
22
சித்ராட்சதன்
23
சாருசித்ரன்
24
சரசனன்
25
துர்மதன்
26
துர்விகன்
27
விவித்சு
28
விக்தனன்
29
உர்ணநாபன்
30
சுநாபன்
31
நந்தன்
32
உபநந்தன்
33
சித்திரபாணன்
34
சித்ரபாணன்
35
சித்திரவர்மன்
36
சுவர்மன்
37
துர்விமோசன்
38
மகாபாரு
39
சித்திராங்கன்
40
சித்திரகுண்டாலன்
41
பிம்வேகன்
42
பிமுபன்
43
பாலகி
44
பாலவரதன்
45
உக்ரயுதன்
46
சுசேனன்
47
குந்தாதரன்
48
மகோதரன்
49
சித்ரயுதன்
50
நிஷாங்கி
51
பஷி
52
விருதகரன்
53
திரிதவர்மன்
54
திரிதட்சத்ரன்
55
சோமகீர்த்தி
56
அனுதரன்
57
திரிதசந்தன்
58
ஜராசங்கன்
59
சத்தியசந்தன்
60
சதஸ்
61
சுவாகன்
62
உக்ரச்ரவன்
63
உக்ரசேனன்
64
சேனானி
65
துஷ்பரஜை
66
அபராஜிதன்
67
குண்டசை
68
விசாலாட்சன்
69
துராதரன்
70
திரிதஹஸ்தன்
71
சுகஸ்தன்
72
வத்வேகன்
73
சுவர்ச்சன்
74
ஆடியகேது
75
பாவசி
76
நகாதத்தன்
77
அக்ரயாய
78
கவசி
79
கிராதன்
80
குண்டினன்
81
குண்டதரன்
82
தனுர்தரன்
83
பீமரதன்
84
வீரபாகு
85
அலோலுபன்
86
அபயன்
87
ருத்ரகர்மன்
88
திரிடரதச்ரயன்
89
அனாக்ருஷ்யன்
90
குந்தபேதி
91
விரவி
92
சித்திரகுண்டலகன்
93
தீர்கலோசன்
94
பிரமாதி
95
வீர்யவான்
96
தீர்கரோமன்
97
தீர்கபூ
98
மகாபாகு
99
குந்தாசி
100
விரஜசன்